Skip to main content

Posts

Showing posts from October, 2010

புதுமைப்பெண்ணே!!!

வெண்மழைச் சாரலில் ஒதுங்கும் சிறு குருவிப்போல உன் மனக்குமரல்களில் முடங்கிடாதே பெண்ணே!!! கணவன் கட்டளையிட்டான் என்றால் கட்டிய கயிறாய் பரிசாக்கு- அவனுக்கு... மருங்காதே மனதளவில்... புதுமைப் படைத்திட பூவுக்கும் போர்க்களம் வேண்டுமடி நான் கண்ட புதுமைப்பெண்ணே!. சிந்திய வேர்வை சிறிதுசிறிதாக சேர்த்துவை அதுவே- ஆபத்தையழிக்கும் ஆயுதமடி நான் கண்ட புதுமைப்பெண்ணே!.  அடுப்படியில் அடங்கிடாமல் அனைவரையும் அடக்கிடு, அன்பிற்கு அடங்காதவனை அறிவாளால் அடக்கிடு என்னருமை புதுமைப்பெண்ணே!. தேக்கரண்டி புடிக்கும் கையில் AK47 எதற்க்கேங்கிறாயா உன் வாழ்வை சீராக்க இது சிறந்த வழியடி புதுமைப் பெண்ணே!!!

பெண்ணே! பெண்ணே!

பெண்ணே! பெண்ணே!      போர்க்களம் வேண்டாம்      வீட்டினுள்ளே ரணகளம் வேண்டாம்     வீட்ட்னுளே முடங்கியிரு-இல்லை     தாயின் வயிற்றில் உறங்கிவிடு...         வெளியே வந்தால் வெட்கம் உனக்கு         குழந்தையில் உனக்கு வேகம் இருக்கு         குமரியில் உனக்கு காதல் இருக்கு        விரைவில் உனக்கு திருமணம் நடக்கும்                              அங்கு       மாமியார் தொல்லை துவங்கிவிடும்       உன் மனது அங்கே சரிந்துவிடும்... பெண்ணே! பெண்ணே!      உறங்கிவிடு -இல்லை     கல்லறை வாயில் திறந்துவிடு     காவல் வேலி உனை துரத்த     கட்டுக்கள் தாண்டி ஓடிவிடு     கடவுள் உன்னை காத்திடுவார்     தன்னுடன் உன்னை சேர்த்திடுவார்... பெண்ணே! பெண்ணே!        துணிந்து நின்று- இந்த        போக்கிரி உலகை வென்றுவிடு....

நான்!

அதிகம் எழுதி     ஆவணம் செய்து நிறைய உண்டு     நிறைகுடம் ஆனேன், பலவற்றை படித்து,     பாட்டு படித்து, தூக்கம் கலைத்து     துர்ஞானம் பெற்றேன் அழுத்து, அறுத்து     அழைகிறேன் - வீதியில்....

நாம்!!!

எனக்காக உனை பார்க்க உன்வாசல் வந்தேன் நீயில்லை,                                               உனக்காக எனை பார்க்க                                               நீ வந்தாய் நானில்லை,                     இடையில் இருவரும் சந்தித்தோம்                       அவரவர் குடும்பத்துடன்...! .

மழலை தூக்கம்...

கண்விழிக்கும் நிலவின் முகமே! கலைந்திடாய்               உன் தூக்கத்தை, உன் உருள் பிறள் அசைவுகளால் வரையப்பட்டிருக்கும்              கசங்கிய கம்பளியே நான்.. விக்கித்து பார்க்கிறேன்              உன் தூங்கும் அழகை... உன் இதழ் பாதம்            எனை களைத்த போதும் உன் சிற்றுடல்           நனைத்த போதும் இரசிக்கிறேன் இந்த           மழலை வேந்தன்.... சிரம் வலிக்கா பூவணையாய்            நானிருந்தேன் சிரத்துக்கு, நீயோ! நான் வலியா            பூமலராய் பூத்துக்கொண்டிருக்கின்றாய் ... உனை சுடுவிடா, விழித்திறல் திறந்துவிடா               சூரியனாய் முயற்சித்தேன் முடியாமல் போனதடா!              என் முல்லைப்பல் சிரிப்பழகே!!! விளித்திரள் வழிநீரும் உதடழகின் உமிழ் நீரும் நீ நனைத்த கம்பளியும், மெத்தென தலையணையும், விழித்தெழ செயம் சூரியனும் ரசித்துதான் பார்க்கின்றன உன் தூக்கத்தின் நெளி, சுழி அழகுகளை- தூங்காமல்.....

இடமா?!

காதலனே!        என் இதயத்தில் இடம் பிடிப்பது மட்டுமல்ல        உன் வேலை- மனதில் நம்பிக்கை முத்திரைப்       பதிப்பதும் கூடத்தான்! அதனால் இடம் பிடிப்பதற்கு பதில்      முன்னேறும் வழியைப்பார் காத்திருந்தாள் பின்பு      காதலிக்கலாம் புறப்படு காதலனே முன்னேற!!!....

சோம்பல் அழகு...

முகில் சோம்பல் முகம் விலக்கி       முக சுழிவில் உதடு பிதுக்கி சுருவிழி திறந்திடாமல் விரியும்,       புன்முறுவல் அழுகையுடன் புதுமலர் போல் விழிக்கின்றாயே... முறிக்கின்ற சோம்பல்விட       சுருங்கும் மூக்கு முகமே அழகு அதிசயத்தை அழைகழிக்கா     அளவாய் ரசித்ததேன் அளவில்லா ஆனந்தத்தால்.... பஞ்சணையில்     பசுமை மலராய் நீ.! மலர் விலக்கும்     பனி சோம்பல் தூக்கமே கலைந்திடாய்! - எட்டாம் அதிசயமாய்     விழிக்கும் மழழை சோம்பல் அழகை நீ மறைத்திடாய்.. ரசிகனாய் மட்டும்      ரசிக்கவே வேண்டும் நீ, நான்,நாம்...

பிடித்தமானவளே!!!

அவசரப்பட்டு காதலித்துவிடாதே,        பார்த்தாலும் மறுபடி திரும்பிப் பார்க்காதே        முடிந்தால் வீம்பை கை விடாதே!        பேச்சில் தொடங்க நெருங்கிவிடாதே       தூது விடாதே அதன் பிறகும்      முளைவிட்ட காதல் கிளை பரப்பினால்      வா காதலிக்கலாம்.... .