Skip to main content

Posts

யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாணோங்கி வாழதுடிக்கும் வலிமையும்...
Recent posts
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர

நானும் நீயும்...!!!

புரியவில்லை எனக்கு - நானா ?! உனக்கு எழுதுகிறேன் என்று நினைக்கும் பொழுது , புரிதலுக்கும் , பழகுதலுக்கும் மட்டுமே பயன் படுத்திய தமிழில் .... ஆச்சர்யம் தான் !!.. ஆனாலும் ஓர் நிறைவு , உனை பற்றிய , இல்லை இல்லை நமைப்பற்றிய என்னின் முதல் கிறுக்கலில் .... மாடர்ன்களுக்ம்   ஃபேஷன்களுக்கும், இடையே , முழு நிலவாய்    பூரணமாய் பிறந்தவள் - நான் !!! கோடையில் மார்கழியாய், கோடியில் ஒருவனாய்   ஹரிநாமத்தில் பிறந்தவன் - நீ !!! பீமனோ , சூரனோ, பார்க்கத்தான் அப்படி    முகம் மறைக்கும் இதழ் சிரிப்பும் விழி , விரி – வழிய கனிவும் கண்டேன் உனில்!!! சொப்பு வைத்தாடியதெல்லாம்    செப்பிலக்கிய காலம் - மழலையாய் விரல் பிடித்து நடந்ததில்லை    நிழலாடி திரிந்ததில்லை - இருந்தாலென்ன !!! மனநிறைவாய் மணமுடித்தவுடன்   விரல் பிடித்து நிழலாடுவோம் - மழலையாய் ... தூது , உலா பற்றி கேட்டதாய் நியாபகம் ,   தலைவன் கடல் தாண்டி சென்றால் தன் நிலைப்பற்றி கூற,புறா               அனுப்புதலாம் ... ஆம்!!!  உணர்ந்தேன் நான் ..!!   Gatget - ல் Whats

காதல(லாய் ஓர்)ர் தினம்....

முன் நின்று, முதல் பார்த்து      முறுவலித்து - பின் சென்று வழிப்பார்த்து, விழியால்     நகைத் தெல்லாம் ஓர் காலம்.... ஆம்!!!! அன்றெல்லாம் " யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்   தானோக்கி மெல்ல தகும்"     என்றோம் வள்ளுவன் வழியாய்... விரல் வலிக்க எழுதியும்,     கால் வலிக்க காத்திருந்தும், கனத்த இதயமும்    கையில் கடிதமுமாய் காதல் செய்தோம்.... வலியிருந்தது அனால் வழியில்லை     இணை சேர..- எத்தனை எத்தனை தடைகள்     " சாதி என்றான், பேதமென்றான் மதம் என்றான், குலமென்றான்     பணமென்றான்"- பகட்டாய்... இன்றும் இவை இருக்கிறது     யார் இல்லை என்றார்.... காதலை கனினியிலும், கைபேசியிலும்    கதைத்தோ, குறுந்தகவல் கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...    இதுவா காதல்..? " கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது" ...- இதுவல்லவே...!!! பிழை கூறவில்லை நான்!     மண்ணில் சிலர் உளர்... யாம் வேண்டுவதெல்லாம் ,     " பெற்றோர் நிராகரித்தலும்,       பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...      அன்பும், அரவ

கை(ம்)பெண்!!!

கணவனை இழந்தவள் விதவையாம்??? அவளுக்கு உலகம் இட்ட பெயர் இதுவாம்... நெற்றி பொட்டு வைக்க தடையுண்டு, மறுமணம் செய்ய வழியுண்டு - ஆனால் பூவில்லா பூவையராய் மற்றிட்டோம், மதியற்று போய்விட்டோம் மனதளவில்... விதவை என்று சொல்லி ஏய்க்காதே,.. இந்த பெண்ணுக்கும் கைம்பெண் என்ற பொருளுண்டு அப்பெயரின் இரு மெய்ப்போல இவளுக்கும் இரு வாழ்வுண்டு.... கைப்பொம்மையாய் இப்பெண்களை ஆட்டிட்டோம் இனி புதுவாழ்வை தொட்டிட்ட வாழ்த்திடுவோம்...... .

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

இந்தியா 2020 !!!

பெறுவோம் என்றா நாம் நினைத்தோம்-சுதந்திரத்தை, வேர்வை தியாகமல்ல பார்த்து ரசிக்க பசுஞ்சோலை செந்நீரால் கழுவப்பட்ட ஓர் காவியம்!- இந்தியா! ஒளி உமிழும் கதிரவன் அலையாடும் புயல் வெடித்தெழும் எரிமலை ஒன்றானால் இந்தியா!.. இணைசேரும் நதித்திட்டம் ஒன்றானால் லஞ்சத்தின் நஞ்சுக்கள் பிடுங்கப்பட்டால் தேசத்தின் மோசங்கள், அரசியலின் வேஷங்கள் முன்னேறும் இந்தியா... இணைப்போம் இளைஞர் கைகள் வளர்ப்போம் வெற்றியின் வித்துக்கள் வாழ்வோம் வல்லரசாய்.... அக்னிசிறகென்றான் அப்துல்கலாம் ஆசைக்கா இல்லை, இல்லை, உன்வேலைக்காக.. இளைஞனே விழித்திரு உன்கனவை விட்டு எழுந்திரு வீறுக்கொண்டு, அடைந்திடுவோம் வெற்றி இந்தியா!!!... கணினி கண்டான் சார்லஸ் போபெஜ் கனவா உனக்கு? வேண்டாமே -எழுதிடு நீ இந்தியன் அந்நியன் அல்ல.. இது முன்னேற்றமா? இல்லை இல்லை இது ஒரு முன்னோடி... இந்திய 2020 ஒரு கனா அல்ல கண்ணிமைக்கும் சாதனை, கனா என்றால் ஒரு கூட கணினியில்தான்... பளபளக்கும் பட்ட தேவை, முகம்பார்க்கும் ஆடியா தேவை பார்த்திடு சாலையை.. ஆகாய ஏரோட்டம் அலைப்பாய வெண்ணிலவு, விளையாட ஓர் செவ்வாய்.. அன்புக்கு அன்னை, அறிவுக்கு ஆசான்