Skip to main content

நானும் நீயும்...!!!

புரியவில்லை எனக்கு - நானா?! உனக்கு எழுதுகிறேன் என்று
நினைக்கும் பொழுது, புரிதலுக்கும், பழகுதலுக்கும் மட்டுமே
பயன் படுத்திய தமிழில்.... ஆச்சர்யம் தான்!!..
ஆனாலும் ஓர் நிறைவு,
உனை பற்றிய, இல்லை இல்லை
நமைப்பற்றிய என்னின் முதல் கிறுக்கலில்....

மாடர்ன்களுக்ம்  ஃபேஷன்களுக்கும், இடையே, முழு நிலவாய்
   பூரணமாய் பிறந்தவள் - நான்!!!
கோடையில் மார்கழியாய், கோடியில் ஒருவனாய்
  ஹரிநாமத்தில் பிறந்தவன்- நீ!!!

பீமனோ, சூரனோ, பார்க்கத்தான் அப்படி

   முகம்
மறைக்கும் இதழ் சிரிப்பும்
விழி, விரிவழிய கனிவும் கண்டேன் உனில்!!!

சொப்பு வைத்தாடியதெல்லாம்
   செப்பிலக்கிய காலம்- மழலையாய்
விரல் பிடித்து நடந்ததில்லை
   நிழலாடி திரிந்ததில்லை- இருந்தாலென்ன!!!
மனநிறைவாய் மணமுடித்தவுடன்
  விரல் பிடித்து நிழலாடுவோம்- மழலையாய்...

தூது, உலா பற்றி கேட்டதாய் நியாபகம்,
  தலைவன் கடல் தாண்டி சென்றால்
தன் நிலைப்பற்றி கூற,புறா           
  அனுப்புதலாம்...ஆம்!!!
 உணர்ந்தேன் நான்..!!

  Gatget -ல் WhatsAppம்,
      Skype -மாய் நாம்      கதைத்தபொழுது...!
முகம் பார்க்க VideoChat-ம், நிழல் பார்க்க Facebook மாய்
   நாம் இருந்தோம் நிகழ் காலத்தில் நிறை நினைவோடு,
 நினைத்தால் இன்றும்  மனம் மலரும்...!!!

வெளிர் நிற வானும், கடலுமிருந்தும்
வேலையில் நீ - நீயுமாய்!!

Car -ம், கடமையும், தோழமையிருந்தும்
கண் நிறை கனவோடு
நான்நானுமாய்!!! வாழ்ந்திட்டோம்....

நிழலோடு நிழலாடி, விளையாடிய நாட்கள்,
நினைவோடு நிறைவாக மாறிடுமே,
நீயென்ற நானும், நானென்ற நீயும்-மனம் இணைந்து, விரல் பிடிக்கும்
     அந்நாளில்..."நாமாக" மாறும்பொழுது

விழி நிறைய, மனம் நிறைய எதிர் பார்க்கும் " நாம் - நாமாக"!!!....

.

Comments

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .