Skip to main content

Posts

Showing posts from February, 2011

சூழ்நிலையே அவள்!!!...

கோபத்தின் வீழ்வுதனில் நானிருந்தேன் தடுத்தான் நண்பன் தவிர்த்தேன் -அவனை, யோசித்து பார்த்தேன் கோபம் குறைந்தது - அவளென்ற சூழ்நிலை மாறியபோது... அமைதி தேடி ஆலயம் சென்றேன் கடவுள்தான் அமைதி, அமைதிதான் கடவுள்... அவளென்ற எண்ணம் தோன்றிய பின் கடவுள் மறைந்ததேன்... கொட்டும் மழையில் கொதித்து போனேன் தென்றல் காற்றில் விலகி நடந்தேன் எண்ணம் இருந்தும் எரியா தீபம் போல தனித்திருந்தேன் அவள் நினைவால்!... புத்தகம் தொட்டால் படிப்பில் கவனம் -அன்று! புத்தகம் தொட்டால் அவள் நினைவோ- இன்று! கோபம் குறைந்து,அமைதி பெற்றேன், மழையில் நனைந்து தென்றலில் ஆடி தீபம் போலிருந்தேன் படிப்பில் ஆம்ம்!!!... அவளென்ற சூழ்நிலை மாறியபோது... .

நட்பு!!!

விரல் பிடித்து கைக்கோர்த்து    கைவீசி " கை வீசம்மா கை வீசு" என்றெல்லாம் பாடிய நியாபகம்... புழுதியா சடுதியா நினைக்கவில்லை    உருண்டுதான் பிரண்டோமே! உடைகிழிந்திருந்தும் சிரித்தோமே!    என்ன ஒரு நட்பு!!! நினைத்தாலே பரவசமாய்.... கால்கடுக்க நீ மிதிக்க,     முன்னமர்ந்து பெண்பார்த்த நினைவெல்லாம் நிழலாய் நம் நெஞ்சில்...    கோடையில் (வா)ஆடிய கோலியும், கிரிகெட்டும்- கண்விழித்து    கதை பேசி நகைத்து நாட்கள் நகர்த்திய- நட்பே நலமா? விடைபெற்றோம் நாம்    விடைத்தெரியாமல்- கல்லூரிக்கு... நான் கண்ட முதல் பிரிவும்    முறியா உறவும் நீ.... உணர்ந்தறியா உலகைவிட்டு,     நான் உணர்ந்த முதலெழுத்து நீ!! நாம் பயின்ற முதல்    வார்த்தை " மச்சி சௌக்கியமா"... ஏன், எதற்கு-வினாயில்லை?    கூப்பிட்டோம், வந்தோம், சிரித்தோம், வாழ்ந்தோம்- வானம்பாடியாய்...! தவறியதில்லை! படத்தை பாடத்தையில்லை .... கூச்சல்,விசில், ஆட்டம் பாட்டமுமாய் ஓர் சிலிர்ப்பு!- பண்டிகையோ? ஆம்ம்.... ஆண்டுவிழா நாம் கல்லூரியை ஆண்டவிழா... தோழமையா, காதலா வெற்றியா, தோற்றோமா? தெரியாமல், புரியாமல் நான

காதல் பெண்ணே!!!

         காதல் பெண்ணே!!! பூமி மிதியடியாய்     வானம் கைக்குட்டையாய் கடல் நீர்க்குவளையில் என்று     பொய்யுரைக்க ஆளானேன்... உன் காதலைப்பெற... பெற்றிட்ட பேரின்பம்     தொற்றிட்ட சிறு கனிவும் தொய்வுண்டு     நின் குடும்பத்தின் அழுகையில்.... .