Skip to main content

Posts

Showing posts from January, 2011

நண்பனைப் பற்றி!

இவன் பற்றி, இவன் கூறும் இவையனைத்தும் இனியவையே! உவமையுண்டு, உருவகமில்லை உணர்வுண்டு, உருவமில்லை நினைவுண்டு, நிழலில்லை நிறைவோடு நிஜம் சொல்ல தமிழன்றி வேறில்லை... குயில் என்பேன் பாடக்கேட்டு, அரி என்பேன் நகைக்க பார்த்து, ஒளி, ஒலி, உணர் உணர்வால் வரி வரியாய் வரைவேன் உனை.... இசையற்ற இசைவற்ற வாழ்க்கை என்பான் இவன்பெற்ற, இவனைப்பெற்ற ரத்தினமே! இணையில்லா இணைவில்லா இரு வாளம், சுதியில்லா, ஸ்ருதியில்லா ஓர் ஓலம், வழியில்லா , வலியில்லா, உருமாறி, உறுமாறி ருதுவான ருசியான ஓர் பயணமிவன்... பெண்னகை புன்னகைப்பற்றி, புன்னகை பெண்ணல்லன், உயர்உணரும் உயர்தினையன் வழியற்று, விழிப்பற்று, விழிபற்றி நீரோடு நின்றால் உளிகொண்டு வழிகண்டு ஒளி கொடுக்கும் கலங்கரையே!!!.. ஞாலத்தின் கோலத்தில், மாலத்தில் தூரிகை ஓவியத்தில், பாடிய காவியத்தில் வீரிய கானத்தில், மீட்டிய மோகனத்தில் உணர்கிறேன்- உரைக்கிறேன் உனை தமையனே, தோழனே-என்னின் காலனே வாழ்க வளர்க- வானுள வானள... .