Skip to main content

Posts

Showing posts from February, 2012

காதல(லாய் ஓர்)ர் தினம்....

முன் நின்று, முதல் பார்த்து      முறுவலித்து - பின் சென்று வழிப்பார்த்து, விழியால்     நகைத் தெல்லாம் ஓர் காலம்.... ஆம்!!!! அன்றெல்லாம் " யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்   தானோக்கி மெல்ல தகும்"     என்றோம் வள்ளுவன் வழியாய்... விரல் வலிக்க எழுதியும்,     கால் வலிக்க காத்திருந்தும், கனத்த இதயமும்    கையில் கடிதமுமாய் காதல் செய்தோம்.... வலியிருந்தது அனால் வழியில்லை     இணை சேர..- எத்தனை எத்தனை தடைகள்     " சாதி என்றான், பேதமென்றான் மதம் என்றான், குலமென்றான்     பணமென்றான்"- பகட்டாய்... இன்றும் இவை இருக்கிறது     யார் இல்லை என்றார்.... காதலை கனினியிலும், கைபேசியிலும்    கதைத்தோ, குறுந்தகவல் கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...    இதுவா காதல்..? " கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது" ...- இதுவல்லவே...!!! பிழை கூறவில்லை நான்!     மண்ணில் சிலர் உளர்... யாம் வேண்டுவதெல்லாம் ,     " பெற்றோர் நிராகரித்தலும்,       பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...      அன்பும், அரவ