Skip to main content

Posts

Showing posts from March, 2011

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

இந்தியா 2020 !!!

பெறுவோம் என்றா நாம் நினைத்தோம்-சுதந்திரத்தை, வேர்வை தியாகமல்ல பார்த்து ரசிக்க பசுஞ்சோலை செந்நீரால் கழுவப்பட்ட ஓர் காவியம்!- இந்தியா! ஒளி உமிழும் கதிரவன் அலையாடும் புயல் வெடித்தெழும் எரிமலை ஒன்றானால் இந்தியா!.. இணைசேரும் நதித்திட்டம் ஒன்றானால் லஞ்சத்தின் நஞ்சுக்கள் பிடுங்கப்பட்டால் தேசத்தின் மோசங்கள், அரசியலின் வேஷங்கள் முன்னேறும் இந்தியா... இணைப்போம் இளைஞர் கைகள் வளர்ப்போம் வெற்றியின் வித்துக்கள் வாழ்வோம் வல்லரசாய்.... அக்னிசிறகென்றான் அப்துல்கலாம் ஆசைக்கா இல்லை, இல்லை, உன்வேலைக்காக.. இளைஞனே விழித்திரு உன்கனவை விட்டு எழுந்திரு வீறுக்கொண்டு, அடைந்திடுவோம் வெற்றி இந்தியா!!!... கணினி கண்டான் சார்லஸ் போபெஜ் கனவா உனக்கு? வேண்டாமே -எழுதிடு நீ இந்தியன் அந்நியன் அல்ல.. இது முன்னேற்றமா? இல்லை இல்லை இது ஒரு முன்னோடி... இந்திய 2020 ஒரு கனா அல்ல கண்ணிமைக்கும் சாதனை, கனா என்றால் ஒரு கூட கணினியில்தான்... பளபளக்கும் பட்ட தேவை, முகம்பார்க்கும் ஆடியா தேவை பார்த்திடு சாலையை.. ஆகாய ஏரோட்டம் அலைப்பாய வெண்ணிலவு, விளையாட ஓர் செவ்வாய்.. அன்புக்கு அன்னை, அறிவுக்கு ஆசான்

கன்னித்தீ

கன்னியின், காதலின் கடைக்கண் பார்வை உன் நெஞ்சை சுட்டதடா... காதலின் மோகத்தில் உன்மனம் நொந்ததடா... படுக்கையிலும், படிக்கையிலும் பார்க்க துடிக்கும் மனம் குளிக்கையிலும், உண்கையிலும் போகதுடிக்கும் தினம்... கன்னியின் கார்மேக உராய்வின் தீ! - காதல் தென்றல் பட்ட மேக மழையின் தூறல் - உன் கண்ணீர்.... கன்னியின் காதல் - தீ!!! அது எரிகின்ற தீபமல்ல உனை எரிகின்ற- தீபந்தம்... .