Skip to main content

இந்தியா 2020 !!!

பெறுவோம் என்றா
நாம் நினைத்தோம்-சுதந்திரத்தை,
வேர்வை தியாகமல்ல பார்த்து ரசிக்க
பசுஞ்சோலை செந்நீரால் கழுவப்பட்ட
ஓர் காவியம்!- இந்தியா!

ஒளி உமிழும் கதிரவன்
அலையாடும் புயல்
வெடித்தெழும் எரிமலை
ஒன்றானால் இந்தியா!..

இணைசேரும் நதித்திட்டம் ஒன்றானால்
லஞ்சத்தின் நஞ்சுக்கள் பிடுங்கப்பட்டால்
தேசத்தின் மோசங்கள், அரசியலின் வேஷங்கள்
முன்னேறும் இந்தியா...
இணைப்போம் இளைஞர்
கைகள் வளர்ப்போம்
வெற்றியின் வித்துக்கள்
வாழ்வோம் வல்லரசாய்....

அக்னிசிறகென்றான் அப்துல்கலாம்
ஆசைக்கா இல்லை, இல்லை, உன்வேலைக்காக..
இளைஞனே விழித்திரு உன்கனவை விட்டு
எழுந்திரு வீறுக்கொண்டு, அடைந்திடுவோம் வெற்றி இந்தியா!!!...

கணினி கண்டான் சார்லஸ் போபெஜ்
கனவா உனக்கு? வேண்டாமே -எழுதிடு
நீ இந்தியன் அந்நியன் அல்ல..
இது முன்னேற்றமா? இல்லை இல்லை
இது ஒரு முன்னோடி...

இந்திய 2020 ஒரு கனா அல்ல
கண்ணிமைக்கும் சாதனை,
கனா என்றால் ஒரு கூட கணினியில்தான்...
பளபளக்கும் பட்ட தேவை,
முகம்பார்க்கும் ஆடியா தேவை
பார்த்திடு சாலையை..
ஆகாய ஏரோட்டம்
அலைப்பாய வெண்ணிலவு,
விளையாட ஓர் செவ்வாய்..

அன்புக்கு அன்னை, அறிவுக்கு ஆசான்
நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங், வெற்றிக்கு இந்தியா!!!...

சில வேண்டும் சீர்படுத்த,
பல வேண்டும் துரத்திட
திண்டாட்டம் ஒன்றெனில்
கண்டறிய விந்தைகளே!..

பறக்கின்ற பறவையா, பறக்கும் தட்டா
தந்திடுவோம் நிகரில்லா,
வெடிக்கும் ஓரணுவா? வேண்டாமே
சிரிக்கும் சிறுகுழந்தை
சிந்திக்கும் அறிவியலை,
அரசியலிலா ஓர் இந்தியா,
விலையில்லா ஓரன்பு, மதியில்லா
குழந்தையா எண்ணிப்பார் ஏமாற்றமே!

ஆம்ம் இந்தியா 2020 !!!..


.

Comments

  1. எத்தனை கனவுகள் கண்டாலும்
    எல்லாமே கனவுகள் மட்டும் தான்
    நிஜத்தில் பொழுது மட்டுமே விடிகிறது
    மனிதனின் துன்பங்கள் அல்ல!
    என்றாலும் போராடுவோம் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை    இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால்,    நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய்    உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி    எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா?    ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும்    ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும்,    கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும்,    மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,    வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில்    கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள்    விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக    சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை    வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக    நீ பிறந்து வந்...