Skip to main content

Posts

Showing posts from May, 2010

உனக்காக ஓர் வரி..!!!

நால்சுவர், மூவறை ஈருயிராய் தனித்திருந்தோம் வெறுப்பாய், வெற்றிடமே எஞ்சியிருந்தது.. ஏனோ?.. வானிலை மாற்றமா? ! விளங்கவில்லை.. சிரித்தோம், பழகினோம் சிலாகித்தோம்... தூறல் விட்ட - இனிமை, குளுமை நம்மிடம்... உணர்ந்தேன் உனை - மண்வாசனையாய்...!!! ஆம்!!!!! இடி ஒலியாய் இறைந்த சிரிப்பொலிகள், ஒளிகற்றையாய் விலகிய நம் சோகங்கள் யாவும் நீயிருந்த மட்டும்... சிறுதூறல் இனிமை போல.... ஏனோ??? பிரிந்தோம் விழி புரிதலில் ரணமில்லா வலியுடன்... நினைத்தேன்! நகைத்தேன்! நினைவுகளில் உன்னால்... வரைகிறேன்!!! "உனக்காக ஓர் வரி"... என்று வருவாய் எனை பார்க்க....

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!

பிச்சைக்காரன்...???

உச்சி வெயில் மேல் கொதிக்க உள்ளங்கால் கீழ்துடிக்க தட்டை ஏந்தி யட்சை கேட்பான்.... மெலிந்ததொரு தேகம் கிழிந்ததொரு ஆடை சகிதம், சகதியிலும் உறங்குவான்.....!!! தொலைந்த வண்ண கனவுகள் விட்டு வண்ண வண்ண உரு தெரியா அளவு மாறின காலணிகள்....??? வாழ்ந்து போன வள்ளுவன் தாடியும் ஆய்வில் வாழும் அறிஞனின் தலையும் பாலையின் வெடிப்பாய் முகம் மட்டும் இருக்கும்....!!! பேருந்து வாழ்வே இவனின் உறவு, ஜன்னல் இருக்கை - இவன் வாழ்க்கை உறவின் இணை, கையேந்தி வாங்கும்போது பாக்கெட்டில் கைவிடும் மனிதனே இவனின் கர்ணன் - இல்லையேல் அடுத்த கர்ணனின் அலைவரிசையில் இவன்.....