Skip to main content

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து

துளி துளியாய் கோர்த்து

ஓர் உருவாய், அவள் கருவாய்

வளர்த்து - வலியின்றி எனை

வலியோடு பிறப்பித்த அன்னையே

உன் பாதம் தொட்ட

ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!!



பிடிப்பின்றி பிறந்த எனை

படிபின்றி ஆக்காமல்

குருதியை குழைத்து உணவாய்

ஊட்டி - உடல் இளைத்தும்,

களைத்தும் மீண்டும் எனக்காய்

பிறக்கும் தந்தையே

தவமாய்! தவத்தின் வரனாய்

பெற்றேன் உன்னை.....!!!



வாழ்வேன் நான் வளமாய்

உன் விழி சிரிக்க- அன்னை

மடி குளிர.. வளர்வேன் இமயமாய்

வானளவு வாழ்கையை எதிர்த்து!

வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்!

நலமாய் வாழ, வளமாய் வாழ

உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!

Comments

  1. //பிடிப்பின்றி பிறந்த எனை
    படிபின்றி ஆக்காமல் //

    super

    ReplyDelete
  2. மிக்க நன்றி! நாம் கண்கூட பார்த்ததுதான்... அப்பா, அம்மா இருவரால்தான் நாம் இன்று நல்ல நிலைமையில் உள்ளோம்..அதை என்றும் மறக்கவேண்டாம் என்றுதான்..எனது என்னத்தை பதிவு செய்தேன்... BLOG ல் வரும் பதிவுகளை பார்த்து தவறு இருந்தால் எனக்கு குறிப்பு கொடுங்கள்...

    ReplyDelete

Post a Comment