Skip to main content

Posts

Showing posts from November, 2010

மழை!!!

உன்னுடன்!!! கால்நனைத்து, உடல் விதிர்த்து விளையாடிய நிமிடங்கள் - களவாடியதரோ? மணல் குழைத்து, கப்பல்விட்டு தவளையுடன் சப்தமிட்டு குரல்கட்டிய குயில்களாய் அலைந்தோமே? காதலி தொடுதலில்லா பரவசம் நீ தொட்டதும்!!! அவள் எனை நீங்கியதும் கண்ணில் கண்டேன் உனை... மும்மாரி இல்லையென்றாலும் விளைச்சல் நோக்கி வாழ்த்திட வருவாயே?... அணைகட்டி!!! ஆறாய் வரும் உனைத்தேக்கி ஆர்பரித்து, அல்லல்ப்படுத்தி அறியோனை இருப்பதனால் நீ பொய்த்துவிட்டயோ??? அடைப்பட்ட உருவமாய், நுகர்ந்துணர்ந்த மணமாய் தீங்கிழைக்கா வாழ்வதே வாழ்க்கையென உணர்த்திய - ஞானியே! நீயில்லா வாழ்வேது எமக்கு பொய்க்காதே பொய்த்துவிடும்- எங்கள் வாழ்க்கை...

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

தீபாவளி!!!!

ஆவளியாய் ஆயிரம் தீபமும், ஆனந்தமாய் அலையாடும் பெண்டீரும்,   பின் சுற்றும் காளையரும்... ஆசையாசையாய் வாங்கிய மத்தாப்பும், பட்டாசும், அரைதூக்க காலை- எண்ணெய் குளியலும், அம்மா சுட்ட பலகாரமும்  நண்பர்களுடன் அரட்டையுமாய்- இனிய தீபாவளி இன்றோ??? இவையாவும் காலப்பெட்டகத்தில்...             ஆம்!!! "வணக்கம் தமிழகம் துவங்கி, புதிய படப்பாடல் பார்த்து,  திரைக்கு வந்தே சில மாதங்களான  சிறப்பு படம் என" - சீரும் சிறப்பும் இல்லாமல் கழிகிறது இன்றைய தீபாவளி- கடையில் வாங்கிய இனிப்புகளுடன்...