Skip to main content

மழை!!!

உன்னுடன்!!!
கால்நனைத்து, உடல் விதிர்த்து
விளையாடிய நிமிடங்கள் - களவாடியதரோ?

மணல் குழைத்து, கப்பல்விட்டு
தவளையுடன் சப்தமிட்டு
குரல்கட்டிய குயில்களாய் அலைந்தோமே?

காதலி தொடுதலில்லா
பரவசம் நீ தொட்டதும்!!!
அவள் எனை நீங்கியதும்
கண்ணில் கண்டேன் உனை...

மும்மாரி இல்லையென்றாலும்
விளைச்சல் நோக்கி
வாழ்த்திட வருவாயே?...

அணைகட்டி!!!
ஆறாய் வரும் உனைத்தேக்கி
ஆர்பரித்து, அல்லல்ப்படுத்தி
அறியோனை இருப்பதனால்
நீ பொய்த்துவிட்டயோ???

அடைப்பட்ட உருவமாய்,
நுகர்ந்துணர்ந்த மணமாய்
தீங்கிழைக்கா வாழ்வதே
வாழ்க்கையென உணர்த்திய - ஞானியே!

நீயில்லா வாழ்வேது எமக்கு
பொய்க்காதே பொய்த்துவிடும்- எங்கள் வாழ்க்கை...

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .