
ஆவளியாய் ஆயிரம் தீபமும்,
ஆனந்தமாய் அலையாடும் பெண்டீரும்,
பின் சுற்றும் காளையரும்...
ஆசையாசையாய் வாங்கிய
மத்தாப்பும், பட்டாசும்,
அரைதூக்க காலை-
எண்ணெய் குளியலும்,
அம்மா சுட்ட பலகாரமும்
நண்பர்களுடன் அரட்டையுமாய்- இனிய தீபாவளி
இன்றோ??? இவையாவும் காலப்பெட்டகத்தில்...
ஆம்!!!
"வணக்கம் தமிழகம் துவங்கி,
புதிய படப்பாடல் பார்த்து,
திரைக்கு வந்தே சில மாதங்களான
சிறப்பு படம் என" - சீரும் சிறப்பும்
இல்லாமல் கழிகிறது
இன்றைய தீபாவளி- கடையில்
வாங்கிய இனிப்புகளுடன்...
நல்லா இருக்கு!
ReplyDelete