Skip to main content

உனக்காக ஓர் வரி..!!!

நால்சுவர், மூவறை

ஈருயிராய் தனித்திருந்தோம்

வெறுப்பாய், வெற்றிடமே

எஞ்சியிருந்தது.. ஏனோ?..



வானிலை மாற்றமா? !

விளங்கவில்லை..

சிரித்தோம், பழகினோம்

சிலாகித்தோம்...

தூறல் விட்ட -

இனிமை, குளுமை

நம்மிடம்... உணர்ந்தேன்

உனை - மண்வாசனையாய்...!!!



ஆம்!!!!!



இடி ஒலியாய் இறைந்த

சிரிப்பொலிகள், ஒளிகற்றையாய்

விலகிய நம் சோகங்கள்

யாவும் நீயிருந்த மட்டும்...

சிறுதூறல் இனிமை போல....



ஏனோ???

பிரிந்தோம் விழி புரிதலில்

ரணமில்லா வலியுடன்...

நினைத்தேன்! நகைத்தேன்!

நினைவுகளில் உன்னால்...



வரைகிறேன்!!!

"உனக்காக ஓர் வரி"...

என்று வருவாய் எனை பார்க்க....

Comments

  1. அழகான கவிவரிகள்!!!

    வாழ்த்துக்கள் சகோ

    http://kuttisuvarkkam.blogspot.com/

    ReplyDelete

Post a Comment