Skip to main content

காதல(லாய் ஓர்)ர் தினம்....


முன் நின்று, முதல் பார்த்து
     முறுவலித்து - பின் சென்று
வழிப்பார்த்து, விழியால்
    நகைத் தெல்லாம் ஓர் காலம்....

ஆம்!!!! அன்றெல்லாம்

" யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்
  தானோக்கி மெல்ல தகும்"

    என்றோம் வள்ளுவன் வழியாய்...

விரல் வலிக்க எழுதியும்,
    கால் வலிக்க காத்திருந்தும்,
கனத்த இதயமும்
   கையில் கடிதமுமாய்
காதல் செய்தோம்....

வலியிருந்தது அனால் வழியில்லை
    இணை சேர..- எத்தனை
எத்தனை தடைகள்
    " சாதி என்றான், பேதமென்றான்
மதம் என்றான், குலமென்றான்
    பணமென்றான்"- பகட்டாய்...

இன்றும் இவை இருக்கிறது
    யார் இல்லை என்றார்....

காதலை கனினியிலும், கைபேசியிலும்
   கதைத்தோ, குறுந்தகவல்
கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...
   இதுவா காதல்..?

" கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது"...- இதுவல்லவே...!!!

பிழை கூறவில்லை நான்!
    மண்ணில் சிலர் உளர்...
யாம் வேண்டுவதெல்லாம் ,
    " பெற்றோர் நிராகரித்தலும்,
      பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...
     அன்பும், அரவணைப்பும்
பொறுமையும், விட்டுகொடுத்தலுமே காதல்...

காதல் தினமும் தேவை, பின்
     எதற்கோர் தனி காதலர் தினம்,
வாழ்வோம் " காதலாய் ஒவ்வோர் தினமும், கணமும்"...

.

Comments

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாண...