Skip to main content

நட்பு!!!

விரல் பிடித்து கைக்கோர்த்து
   கைவீசி " கை வீசம்மா கை வீசு"
என்றெல்லாம் பாடிய நியாபகம்...

புழுதியா சடுதியா நினைக்கவில்லை
   உருண்டுதான் பிரண்டோமே!
உடைகிழிந்திருந்தும் சிரித்தோமே!
   என்ன ஒரு நட்பு!!! நினைத்தாலே பரவசமாய்....

கால்கடுக்க நீ மிதிக்க,
    முன்னமர்ந்து பெண்பார்த்த
நினைவெல்லாம் நிழலாய் நம் நெஞ்சில்...
   கோடையில் (வா)ஆடிய கோலியும்,
கிரிகெட்டும்- கண்விழித்து
   கதை பேசி நகைத்து
நாட்கள் நகர்த்திய- நட்பே நலமா?

விடைபெற்றோம் நாம்
   விடைத்தெரியாமல்- கல்லூரிக்கு...
நான் கண்ட முதல் பிரிவும்
   முறியா உறவும் நீ....

உணர்ந்தறியா உலகைவிட்டு,
    நான் உணர்ந்த முதலெழுத்து நீ!!
நாம் பயின்ற முதல்
   வார்த்தை " மச்சி சௌக்கியமா"...
ஏன், எதற்கு-வினாயில்லை?
   கூப்பிட்டோம், வந்தோம்,
சிரித்தோம், வாழ்ந்தோம்- வானம்பாடியாய்...!

தவறியதில்லை!
படத்தை பாடத்தையில்லை ....
கூச்சல்,விசில், ஆட்டம் பாட்டமுமாய்
ஓர் சிலிர்ப்பு!- பண்டிகையோ?
ஆம்ம்....
ஆண்டுவிழா நாம் கல்லூரியை ஆண்டவிழா...

தோழமையா, காதலா
வெற்றியா, தோற்றோமா?
தெரியாமல், புரியாமல்
நான் தொலைத்த முதல் பொக்கிஷமும்
முடியாத முதல் பயணமும் நீதான்!!!....

பிரிவு வலியது ஆனால்
    அறுதியானது!
பிரிந்தும், வளர்ந்தும்
   சிலநேரம் உலர்ந்தும்
உறுதியானது நட்பு!!!...
வள்ளுவன் என்றும் பொய்த்ததில்லை
                   ஆம்ம்....
" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
     உணர்ந்தோம், உணர்ந்ததினால்
உணர்த்துவோம் உலகுக்கு
     நம் நடப்பால்!!!...

.

Comments

Post a Comment

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாண...