Skip to main content
சுதந்திரம்!!!
நித்தம் நித்தம் குறை கூறி
தற்பெருமை தலைக்கேறி
தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்....

அரிசி முதல் ஆட்சி வரை
கால் வலி முதல் கால்வாய் வரை
சுற்றமே குற்றம் என...

காந்தியா, நேதாஜியா?
யார் சரி, யார் வலியவர் , பெரியவர்..
பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள்
பீர் ஊற்றி சட்டை கழற்றி
சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு!
" சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"...

தாய் மடி(விலை நிலம்) விற்று
தண்ணீருக்கும், தாணியத்துக்கும்
தலை விரித்து, தாடி வளர்க்கும்
தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள்
ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"...

"தனி மனிதனுக்கு உணவில்லை
என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!"
என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!...

நம் சமூகமே சாக்கடையாய்,
உணவின்றி அலையும் தருணம்
சில பல ஆண்டுகளில்
இருந்தும், சிரிப்போம் மரம் விற்று,
பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால்
" நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்"

இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும்
நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்..
சேற்றில் முளைத்த சில தாமரைகள் பார்க்கும் வரை,
முள்நடுவில் முளைத்த சில ரோஜாக்கள் நுகரும் வரை...

உணர்ந்தறிந்து பின்பற்ற
விவேகானந்த்தரோ, புத்தரோ தேவையிலை
இந்த "தைரியவான்கள் போதும்
(" Masanamuthu Arunachalam Ra Aravindh
Nambi Loyola Durga Greens)நம்மில் மாற்றம் காண...

இயற்கையோடு இயைந்து, அதை
பாதுகாத்து வாழ்வதே " சுதந்திரம்" - என
உணர வைத்த நண்பர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துகள்.....
    .

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

காதல் தோழியே!!!

பெண்ணே- என்னரும் தோழியே       தோளுக்கு தோளாய் இன்பத்தில் தேனாய்      துன்பத்தில் தூணாய் எனக்கு உதவியவளே... நட்பெனும் கப்பலில்      நானும் நீயும் - காதலில்லா கைதுடுப்பை அசைக்கிறோம்...     வாழ்க்கை கடலை கடக்கையில் காதலெனும் புயல் வீச     அன்பென்னும் மின்னல் வெட்ட இணைவெனும் இடி      முழங்கியது நம் மனதில்... காதலைவிட, காலத்தைவிட     நட்பென்பது சிறந்ததல்லவா என் காதல் தோழியே!..     என் ஆசையை நன் மறைக்க உன் ஆசையை நீ மறைக்க     வாழ்க்கை கடலில் ஒரே கப்பலில்- நீயும் நானும்... .