பெண்ணே! பெண்ணே!
போர்க்களம் வேண்டாம்
வீட்டினுள்ளே ரணகளம் வேண்டாம்
வீட்ட்னுளே முடங்கியிரு-இல்லை
தாயின் வயிற்றில் உறங்கிவிடு...
வெளியே வந்தால் வெட்கம் உனக்கு
குழந்தையில் உனக்கு வேகம் இருக்கு
குமரியில் உனக்கு காதல் இருக்கு
விரைவில் உனக்கு திருமணம் நடக்கும்
அங்கு
மாமியார் தொல்லை துவங்கிவிடும்
உன் மனது அங்கே சரிந்துவிடும்...
பெண்ணே! பெண்ணே!
உறங்கிவிடு -இல்லை
கல்லறை வாயில் திறந்துவிடு
காவல் வேலி உனை துரத்த
கட்டுக்கள் தாண்டி ஓடிவிடு
கடவுள் உன்னை காத்திடுவார்
தன்னுடன் உன்னை சேர்த்திடுவார்...
பெண்ணே! பெண்ணே!
துணிந்து நின்று- இந்த
போக்கிரி உலகை வென்றுவிடு....
No comments:
Post a Comment