Skip to main content

Posts

காதல(லாய் ஓர்)ர் தினம்....

முன் நின்று, முதல் பார்த்து      முறுவலித்து - பின் சென்று வழிப்பார்த்து, விழியால்     நகைத் தெல்லாம் ஓர் காலம்.... ஆம்!!!! அன்றெல்லாம் " யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்   தானோக்கி மெல்ல தகும்"     என்றோம் வள்ளுவன் வழியாய்... விரல் வலிக்க எழுதியும்,     கால் வலிக்க காத்திருந்தும், கனத்த இதயமும்    கையில் கடிதமுமாய் காதல் செய்தோம்.... வலியிருந்தது அனால் வழியில்லை     இணை சேர..- எத்தனை எத்தனை தடைகள்     " சாதி என்றான், பேதமென்றான் மதம் என்றான், குலமென்றான்     பணமென்றான்"- பகட்டாய்... இன்றும் இவை இருக்கிறது     யார் இல்லை என்றார்.... காதலை கனினியிலும், கைபேசியிலும்    கதைத்தோ, குறுந்தகவல் கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...    இதுவா காதல்..? " கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது" ...- இதுவல்லவே...!!! பிழை கூறவில்லை நான்!     மண்ணில் சி...

கை(ம்)பெண்!!!

கணவனை இழந்தவள் விதவையாம்??? அவளுக்கு உலகம் இட்ட பெயர் இதுவாம்... நெற்றி பொட்டு வைக்க தடையுண்டு, மறுமணம் செய்ய வழியுண்டு - ஆனால் பூவில்லா பூவையராய் மற்றிட்டோம், மதியற்று போய்விட்டோம் மனதளவில்... விதவை என்று சொல்லி ஏய்க்காதே,.. இந்த பெண்ணுக்கும் கைம்பெண் என்ற பொருளுண்டு அப்பெயரின் இரு மெய்ப்போல இவளுக்கும் இரு வாழ்வுண்டு.... கைப்பொம்மையாய் இப்பெண்களை ஆட்டிட்டோம் இனி புதுவாழ்வை தொட்டிட்ட வாழ்த்திடுவோம்...... .

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

இந்தியா 2020 !!!

பெறுவோம் என்றா நாம் நினைத்தோம்-சுதந்திரத்தை, வேர்வை தியாகமல்ல பார்த்து ரசிக்க பசுஞ்சோலை செந்நீரால் கழுவப்பட்ட ஓர் காவியம்!- இந்தியா! ஒளி உமிழும் கதிரவன் அலையாடும் புயல் வெடித்தெழும் எரிமலை ஒன்றானால் இந்தியா!.. இணைசேரும் நதித்திட்டம் ஒன்றானால் லஞ்சத்தின் நஞ்சுக்கள் பிடுங்கப்பட்டால் தேசத்தின் மோசங்கள், அரசியலின் வேஷங்கள் முன்னேறும் இந்தியா... இணைப்போம் இளைஞர் கைகள் வளர்ப்போம் வெற்றியின் வித்துக்கள் வாழ்வோம் வல்லரசாய்.... அக்னிசிறகென்றான் அப்துல்கலாம் ஆசைக்கா இல்லை, இல்லை, உன்வேலைக்காக.. இளைஞனே விழித்திரு உன்கனவை விட்டு எழுந்திரு வீறுக்கொண்டு, அடைந்திடுவோம் வெற்றி இந்தியா!!!... கணினி கண்டான் சார்லஸ் போபெஜ் கனவா உனக்கு? வேண்டாமே -எழுதிடு நீ இந்தியன் அந்நியன் அல்ல.. இது முன்னேற்றமா? இல்லை இல்லை இது ஒரு முன்னோடி... இந்திய 2020 ஒரு கனா அல்ல கண்ணிமைக்கும் சாதனை, கனா என்றால் ஒரு கூட கணினியில்தான்... பளபளக்கும் பட்ட தேவை, முகம்பார்க்கும் ஆடியா தேவை பார்த்திடு சாலையை.. ஆகாய ஏரோட்டம் அலைப்பாய வெண்ணிலவு, விளையாட ஓர் செவ்வாய்.. அன்புக்கு அன்னை, அற...

கன்னித்தீ

கன்னியின், காதலின் கடைக்கண் பார்வை உன் நெஞ்சை சுட்டதடா... காதலின் மோகத்தில் உன்மனம் நொந்ததடா... படுக்கையிலும், படிக்கையிலும் பார்க்க துடிக்கும் மனம் குளிக்கையிலும், உண்கையிலும் போகதுடிக்கும் தினம்... கன்னியின் கார்மேக உராய்வின் தீ! - காதல் தென்றல் பட்ட மேக மழையின் தூறல் - உன் கண்ணீர்.... கன்னியின் காதல் - தீ!!! அது எரிகின்ற தீபமல்ல உனை எரிகின்ற- தீபந்தம்... .

சூழ்நிலையே அவள்!!!...

கோபத்தின் வீழ்வுதனில் நானிருந்தேன் தடுத்தான் நண்பன் தவிர்த்தேன் -அவனை, யோசித்து பார்த்தேன் கோபம் குறைந்தது - அவளென்ற சூழ்நிலை மாறியபோது... அமைதி தேடி ஆலயம் சென்றேன் கடவுள்தான் அமைதி, அமைதிதான் கடவுள்... அவளென்ற எண்ணம் தோன்றிய பின் கடவுள் மறைந்ததேன்... கொட்டும் மழையில் கொதித்து போனேன் தென்றல் காற்றில் விலகி நடந்தேன் எண்ணம் இருந்தும் எரியா தீபம் போல தனித்திருந்தேன் அவள் நினைவால்!... புத்தகம் தொட்டால் படிப்பில் கவனம் -அன்று! புத்தகம் தொட்டால் அவள் நினைவோ- இன்று! கோபம் குறைந்து,அமைதி பெற்றேன், மழையில் நனைந்து தென்றலில் ஆடி தீபம் போலிருந்தேன் படிப்பில் ஆம்ம்!!!... அவளென்ற சூழ்நிலை மாறியபோது... .

நட்பு!!!

விரல் பிடித்து கைக்கோர்த்து    கைவீசி " கை வீசம்மா கை வீசு" என்றெல்லாம் பாடிய நியாபகம்... புழுதியா சடுதியா நினைக்கவில்லை    உருண்டுதான் பிரண்டோமே! உடைகிழிந்திருந்தும் சிரித்தோமே!    என்ன ஒரு நட்பு!!! நினைத்தாலே பரவசமாய்.... கால்கடுக்க நீ மிதிக்க,     முன்னமர்ந்து பெண்பார்த்த நினைவெல்லாம் நிழலாய் நம் நெஞ்சில்...    கோடையில் (வா)ஆடிய கோலியும், கிரிகெட்டும்- கண்விழித்து    கதை பேசி நகைத்து நாட்கள் நகர்த்திய- நட்பே நலமா? விடைபெற்றோம் நாம்    விடைத்தெரியாமல்- கல்லூரிக்கு... நான் கண்ட முதல் பிரிவும்    முறியா உறவும் நீ.... உணர்ந்தறியா உலகைவிட்டு,     நான் உணர்ந்த முதலெழுத்து நீ!! நாம் பயின்ற முதல்    வார்த்தை " மச்சி சௌக்கியமா"... ஏன், எதற்கு-வினாயில்லை?    கூப்பிட்டோம், வந்தோம், சிரித்தோம், வாழ்ந்தோம்- வானம்பாடியாய்...! தவறியதில்லை! படத்தை பாடத்தையில்லை .... கூச்சல்,விசில், ஆட்டம் பாட்டமுமாய் ஓர் சிலிர்ப்பு!- பண்டிகையோ? ஆம்ம்......