Skip to main content

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல்
நாணம்!
ஈர்பல் நகைத்தல்
வெட்கம்!

விசும்பிய குரலும்,
சுருங்கிய விழியும்
நேசம்!

கோதிய விரலும்
கோதுதல் பதமும்
பாசம்!

மக்கட்- அதட்டிய பின்பு,
தானே அழுதிடும் கண்கள்
சோகம்!

பஞ்சனை மஞ்சத்தில்
மேனி பசுந்தீ பரவலாய்
மோகம்!

தன்னுயிர் நீந்தீனும்
மக்கட், பதி
நினை மறவா- ஒரு தீரா
தாபம்!

தன் உடல் எரித்தும்
ஒளி கொடுக்கும்- அவள்
என்றும் அணையா உயிர்
தீபம்!...

Comments

  1. //தன் உடல் எரித்தும்
    ஒளி கொடுக்கும்- அவள்
    என்றும் அணையா உயிர்//

    சில வரிகளில் பெண்மையின் உன்னதத்தை அருமையா உணர்த்தி விட்டீர்கள்...நன்றி

    ReplyDelete
  2. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @KOUSALYA: நன்றி தோழியே!..பார்கிறேன், உணர்கிறேன் பெண்களை..எண்ணின் தாயாய்,சகோதரியாய்,தோழியாய்...

    @dILIP: நன்றி நண்பா!...

    @NIS: நன்றி!!!

    ReplyDelete
  4. மிகவும் அருமை.. ஒவ்வொரு வரிகளும் சூப்பர்..

    ReplyDelete
  5. எல்லா வரிகளும் அருமை....

    ReplyDelete
  6. வரிகள் எல்லாம் மென்மையாவும்,இதமாகவும் இருக்கு அருண்:))

    ReplyDelete
  7. @பதிவுலகில் பாபு: நன்றி நண்பா..

    @ஆமினா:நன்றி தோழியே!..

    @ஆனந்தி:மிக்க நன்றி தோழியே!..

    ReplyDelete
  8. பெண் என்பவள்
    நீரை போல
    ஒரே நேரத்தில்
    உறையவும்
    கரையவும்
    அவளால் மட்டுமே இயலும்
    மனதை தொடுகின்ற வரிகள் :)

    ReplyDelete
  9. மறுக்க முடியாத உண்மை!.. நன்றி லல்லி..

    ReplyDelete

Post a Comment