Skip to main content

Posts

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை    இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால்,    நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய்    உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி    எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா?    ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும்    ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும்,    கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும்,    மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,    வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில்    கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள்    விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக    சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை    வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக    நீ பிறந்து வந்...

காதல் தோழியே!!!

பெண்ணே- என்னரும் தோழியே       தோளுக்கு தோளாய் இன்பத்தில் தேனாய்      துன்பத்தில் தூணாய் எனக்கு உதவியவளே... நட்பெனும் கப்பலில்      நானும் நீயும் - காதலில்லா கைதுடுப்பை அசைக்கிறோம்...     வாழ்க்கை கடலை கடக்கையில் காதலெனும் புயல் வீச     அன்பென்னும் மின்னல் வெட்ட இணைவெனும் இடி      முழங்கியது நம் மனதில்... காதலைவிட, காலத்தைவிட     நட்பென்பது சிறந்ததல்லவா என் காதல் தோழியே!..     என் ஆசையை நன் மறைக்க உன் ஆசையை நீ மறைக்க     வாழ்க்கை கடலில் ஒரே கப்பலில்- நீயும் நானும்... .

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

மழை!!!

உன்னுடன்!!! கால்நனைத்து, உடல் விதிர்த்து விளையாடிய நிமிடங்கள் - களவாடியதரோ? மணல் குழைத்து, கப்பல்விட்டு தவளையுடன் சப்தமிட்டு குரல்கட்டிய குயில்களாய் அலைந்தோமே? காதலி தொடுதலில்லா பரவசம் நீ தொட்டதும்!!! அவள் எனை நீங்கியதும் கண்ணில் கண்டேன் உனை... மும்மாரி இல்லையென்றாலும் விளைச்சல் நோக்கி வாழ்த்திட வருவாயே?... அணைகட்டி!!! ஆறாய் வரும் உனைத்தேக்கி ஆர்பரித்து, அல்லல்ப்படுத்தி அறியோனை இருப்பதனால் நீ பொய்த்துவிட்டயோ??? அடைப்பட்ட உருவமாய், நுகர்ந்துணர்ந்த மணமாய் தீங்கிழைக்கா வாழ்வதே வாழ்க்கையென உணர்த்திய - ஞானியே! நீயில்லா வாழ்வேது எமக்கு பொய்க்காதே பொய்த்துவிடும்- எங்கள் வாழ்க்கை...

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

தீபாவளி!!!!

ஆவளியாய் ஆயிரம் தீபமும், ஆனந்தமாய் அலையாடும் பெண்டீரும்,   பின் சுற்றும் காளையரும்... ஆசையாசையாய் வாங்கிய மத்தாப்பும், பட்டாசும், அரைதூக்க காலை- எண்ணெய் குளியலும், அம்மா சுட்ட பலகாரமும்  நண்பர்களுடன் அரட்டையுமாய்- இனிய தீபாவளி இன்றோ??? இவையாவும் காலப்பெட்டகத்தில்...             ஆம்!!! "வணக்கம் தமிழகம் துவங்கி, புதிய படப்பாடல் பார்த்து,  திரைக்கு வந்தே சில மாதங்களான  சிறப்பு படம் என" - சீரும் சிறப்பும் இல்லாமல் கழிகிறது இன்றைய தீபாவளி- கடையில் வாங்கிய இனிப்புகளுடன்...