Skip to main content

காதல் தோழியே!!!

பெண்ணே- என்னரும் தோழியே
      தோளுக்கு தோளாய்
இன்பத்தில் தேனாய்
     துன்பத்தில் தூணாய்
எனக்கு உதவியவளே...

நட்பெனும் கப்பலில்
     நானும் நீயும் - காதலில்லா
கைதுடுப்பை அசைக்கிறோம்...
    வாழ்க்கை கடலை கடக்கையில்
காதலெனும் புயல் வீச
    அன்பென்னும் மின்னல் வெட்ட
இணைவெனும் இடி
     முழங்கியது நம் மனதில்...

காதலைவிட, காலத்தைவிட
    நட்பென்பது சிறந்ததல்லவா
என் காதல் தோழியே!..
    என் ஆசையை நன் மறைக்க
உன் ஆசையை நீ மறைக்க
    வாழ்க்கை கடலில்
ஒரே கப்பலில்- நீயும் நானும்...

.

Comments

  1. நன்று..!! குறிப்பாக கடைசி பத்தி..!! வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. காதலை மறப்பதை மறைப்பதை மறப்போம்
    அதாவது வெளிப்படுத்துவோம்

    ReplyDelete
  3. @KOSULYA: Thank you very much...

    @Amina: Thank you very much...

    @பால்: நன்றி நண்பரே..தொடர்ந்து எனது பதிவை படித்து வருவதுற்கு மற்றொமொரு நன்றி..

    @ meena: நிச்சயமாக நம் காதலை மறக்கவும் கூடாது, மறைக்கவும் கூடாது..என்னில் ஏற்பட்ட ஓர் நிகழ்வுதான் இது..
    உணர்த்த பின்பு நகைக்கிறேன் மனதளவில்..

    ReplyDelete

Post a Comment