Skip to main content

நண்பனைப் பற்றி!

இவன் பற்றி, இவன் கூறும்
இவையனைத்தும் இனியவையே!
உவமையுண்டு, உருவகமில்லை
உணர்வுண்டு, உருவமில்லை
நினைவுண்டு, நிழலில்லை
நிறைவோடு நிஜம் சொல்ல
தமிழன்றி வேறில்லை...

குயில் என்பேன் பாடக்கேட்டு,
அரி என்பேன் நகைக்க பார்த்து,
ஒளி, ஒலி, உணர் உணர்வால்
வரி வரியாய் வரைவேன் உனை....

இசையற்ற இசைவற்ற வாழ்க்கை என்பான்
இவன்பெற்ற, இவனைப்பெற்ற ரத்தினமே!
இணையில்லா இணைவில்லா இரு வாளம்,
சுதியில்லா, ஸ்ருதியில்லா ஓர் ஓலம்,
வழியில்லா , வலியில்லா,
உருமாறி, உறுமாறி
ருதுவான ருசியான ஓர் பயணமிவன்...

பெண்னகை புன்னகைப்பற்றி,
புன்னகை பெண்ணல்லன்,
உயர்உணரும் உயர்தினையன்
வழியற்று, விழிப்பற்று,
விழிபற்றி நீரோடு நின்றால்
உளிகொண்டு வழிகண்டு
ஒளி கொடுக்கும் கலங்கரையே!!!..

ஞாலத்தின் கோலத்தில், மாலத்தில்
தூரிகை ஓவியத்தில், பாடிய காவியத்தில்
வீரிய கானத்தில், மீட்டிய மோகனத்தில்
உணர்கிறேன்- உரைக்கிறேன் உனை
தமையனே, தோழனே-என்னின் காலனே
வாழ்க வளர்க- வானுள வானள...

.

Comments

  1. வார்த்தைகள் கோர்த்த விதம் ரொம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  2. நன்றி தோழியே!... தாங்கள் தவறாமல் தொடர்ந்து எனது இடுகைகளை படித்து வருவதற்கு மற்றுமொரு நன்றி..

    ReplyDelete
  3. இன்றுதான் கண்டு கொண்டேன்.........அழகான கவி நயம் தமிழ் எனும் முத்தெடுத்து கோர்த்த கவிதை மாலை,அருமை பாராட்டுக்கள். உங்களிடம் நான் தமிழ் பயில் உங்கள்தளம் வருவேன்.சகோதரி நிலாமதி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர