Skip to main content
புத்தினம் புதினமாய்
புத்தியில் புனிதமாய்
புலரட்டும் ....

புதுமையோ, புலமையோ
சிறுமையோ, சிந்தனையோ
வளமையோ, வறுமையோ
வாழ்வது நமக்கா கட்டும்....

இறந்த காலம்!!!
இறவாமல் இருக்கட்டும் நினைவுகளில்...
நிகழ்காலம்!!!
இனி நிழலாய் இருக்கட்டும்
நண்பர்கள் படைசூழ....

இத்தினதிலோர் உறுதி...!
" செய்வன திருந்த செய்வோம்
செய்ததை கடை பிடிப்போம்"....

சிந்தையில் செம்மையாய்
செழுமையை வாழ,
நமக்கு வாழ்வளித்த
தெய்வங்களுக்கு " பாதம் தொட்டு
கோடி நமஸ்காரங்கள்"....

------இவன்
இள.அருண் குமார்

Comments

  1. //நமக்கு வாழ்வளித்த
    தெய்வங்களுக்கு " பாதம் தொட்டு
    கோடி நமஸ்காரங்கள்"....//
    super

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாண...