Skip to main content

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட
    கண்ணில் நீர் வந்தது
நீ என்னை கேட்க்கும் வரை,
    கேட்ட கணத்தில்
நின்றோதொரு நொடி
    என் இயக்கமெல்லாம்..

கண்ணே என்றா
    நன் அழைப்பேன்,
இல்லை, இல்லை
    கன்னி எனை
வென்ற கள்ளியா நீ
    இல்லை, இல்லை
துன்பங்கள் குறைத்தாய்
   இன்பத்தில் இருக்கும்போது

ஆம்!

நீ என்னின் நிகழ்காலம்!...

    சுற்றி வர நினைத்தேன்
சுழற் காற்றாய்,
    தடைபோட நினைத்தேன்
அணைக்கட்டாய்,
    சுழன்று கொண்டு
அணைப்போட்டாய்
    உன் நெஞ்சில்- எனக்கு...

நீயா வந்து சொல்லும் வரை
   நானா உரைப்பேன்
உனைப்பற்றி என்
   நெஞ்சில் உள்ளதை...

.

Comments

  1. //நீயா வந்து சொல்லும் வரை
    நானா உரைப்பேன்
    உனைப்பற்றி என்
    நெஞ்சில் உள்ளதை//

    அன்புக்கு இடையில் ஏன் இந்த இடைவெளி. எட்டி நிற்பதை விட்டு கட்டிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. கவிதை அருமை . வார்த்தைகளில் காதல் கசிகிறது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் யதீத். தங்கள் கவிதை அருமை.

    எனது வலைப்பூக்களை தாங்கள் தொடர்ந்து வருவதை தமிழ் இன்ட்லி இணையப் பக்கத்தில் கண்டேன்.

    ஆதரவுக்கு நன்றி. அருமையாக பதிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.

    --
    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
    ---------------------------------------------------
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ----------------------------------------------------
    வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
    வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

    ReplyDelete
  4. @தமிழ்பிரியன்: சிலநேரம் மனதும் மூளையும் வேவேரக வேலை செய்கிறது நண்பா! ஊடலில் தான் தேடல் அதனால் தான் இந்த இடைவெளி...

    @பனித்துளி சங்கர் : மிக்க நன்றி நண்பா!

    @Ashvinji: அஷ்வின் எனது பெயர் அருண்குமார், ஒரு மாறுதலுக்காக அந்த பெயரி வைத்தேன்...
    மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  5. காதலை முதலில் சொல்வது யார் என்பதில்
    ஒரு கஷ்டம் குடியுள்ளது அதனில்

    அன்பை சொல்லவோ
    கஷ்டம் ஏதுமில்லை

    காதலைச் சொல்ல விரும்புவோரே
    முதலில் அன்பைச் சொல்லுங்கள்.
    காதல் உதிக்க
    இருவரும் பரிமாற காதலை
    வாய்ப்பும் வருமோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாணோங்கி வாழதுடிக்கும் வலிமையும்...