Skip to main content

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட
    கண்ணில் நீர் வந்தது
நீ என்னை கேட்க்கும் வரை,
    கேட்ட கணத்தில்
நின்றோதொரு நொடி
    என் இயக்கமெல்லாம்..

கண்ணே என்றா
    நன் அழைப்பேன்,
இல்லை, இல்லை
    கன்னி எனை
வென்ற கள்ளியா நீ
    இல்லை, இல்லை
துன்பங்கள் குறைத்தாய்
   இன்பத்தில் இருக்கும்போது

ஆம்!

நீ என்னின் நிகழ்காலம்!...

    சுற்றி வர நினைத்தேன்
சுழற் காற்றாய்,
    தடைபோட நினைத்தேன்
அணைக்கட்டாய்,
    சுழன்று கொண்டு
அணைப்போட்டாய்
    உன் நெஞ்சில்- எனக்கு...

நீயா வந்து சொல்லும் வரை
   நானா உரைப்பேன்
உனைப்பற்றி என்
   நெஞ்சில் உள்ளதை...

.

Comments

  1. //நீயா வந்து சொல்லும் வரை
    நானா உரைப்பேன்
    உனைப்பற்றி என்
    நெஞ்சில் உள்ளதை//

    அன்புக்கு இடையில் ஏன் இந்த இடைவெளி. எட்டி நிற்பதை விட்டு கட்டிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. கவிதை அருமை . வார்த்தைகளில் காதல் கசிகிறது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் யதீத். தங்கள் கவிதை அருமை.

    எனது வலைப்பூக்களை தாங்கள் தொடர்ந்து வருவதை தமிழ் இன்ட்லி இணையப் பக்கத்தில் கண்டேன்.

    ஆதரவுக்கு நன்றி. அருமையாக பதிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.

    --
    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
    ---------------------------------------------------
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ----------------------------------------------------
    வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
    வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

    ReplyDelete
  4. @தமிழ்பிரியன்: சிலநேரம் மனதும் மூளையும் வேவேரக வேலை செய்கிறது நண்பா! ஊடலில் தான் தேடல் அதனால் தான் இந்த இடைவெளி...

    @பனித்துளி சங்கர் : மிக்க நன்றி நண்பா!

    @Ashvinji: அஷ்வின் எனது பெயர் அருண்குமார், ஒரு மாறுதலுக்காக அந்த பெயரி வைத்தேன்...
    மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  5. காதலை முதலில் சொல்வது யார் என்பதில்
    ஒரு கஷ்டம் குடியுள்ளது அதனில்

    அன்பை சொல்லவோ
    கஷ்டம் ஏதுமில்லை

    காதலைச் சொல்ல விரும்புவோரே
    முதலில் அன்பைச் சொல்லுங்கள்.
    காதல் உதிக்க
    இருவரும் பரிமாற காதலை
    வாய்ப்பும் வருமோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .