Skip to main content

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை
   இடித்துவிட்டாய் உந்தன்
இன்னிசை பாக்களால்,
   நம்மை எதிர்த்தோரை
துரத்திவிட்டாய்
   உந்தன் வேட்க்கையால்...

காக்கை, குருவி
   எங்கள் ஜாதி என்றாய்
உயிர் வாழும் ஒற்றுமையினாலா?
   ஓடியாடும் பாப்பாக்கும்,
பாடி பறக்கும் குயிலுக்கும்
   ஒரு பாட்டு பாடிச்சென்றாய்
இந்த உலகில்...

வெண்தலை முண்டாசும்,
   கருநிற உடற்கோப்பும்,
கால்களிலே கட்டை செருப்பும்,
   மார்தனிலே வீரமுழக்கமும்,
சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,
   வந்தாய் நீ...

வீன்நேரம் வீட்டில்
   கூட கழிக்காமல்
விடுதலை வித்துக்கள்
   விதைத்தாய் இவ்வுலகில்...
வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக
   சீர் செய்திருந்தாய்
உந்தன் சிந்தையை

பேர் கொண்டாய்

" மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா

இல்லை, இல்லை

"மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று...

நீ பிறந்ததும் விடுதலை
   வேட்க்கை வந்ததா- இல்லை
விடுதலை வேட்க்கைக்காக
   நீ பிறந்து வந்தாயா?...
சொல் கவியே
   உனை நான் நேரில்
பர்த்தில்லை என்றாலும்
   என் குரு நீயே
உன்வடிக்கு நானிடும்
   கவிப்பூ இதுவே...

.

Comments

  1. முண்டாசு கவிக்கு நல்ல கவி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை..

    ReplyDelete
  3. நல்லா இருக்கு கவிதை.. :)

    ReplyDelete
  4. @ LK: நன்றி நண்பா.. நம்மால் முடிந்த மரியாதையை நம் கொடுத்தே ஆகவேண்டும்...
    @ பதிவுலகில் பாபு: நன்றி நண்பரே!..எனது பதிவுகளை தவறாமல் படித்து வருவதற்கு நன்றி!
    @Paul: நன்றி நண்பா..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .