Skip to main content

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும்,
இடம்விடாமல் இடை தடவினாலும்
உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய்
நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும்

மார்கழி மாதமயினும்
வெப்பமும், தொப்பமுமாய்
நனைய - தமையனும்....
முதியோர் இருக்கையில்
இளைஞன் அமர்ந்தும்
கேட்க முடியா- பெற்றோரும்...

மன ஊனத்தால் - உடல்
ஊனத்தை ஏளனமாய்
ஏய்க்கும் - பதறுகளும்...
பணமே பலனென்று
பொருள் திருடும் - திருடனும்
திருப்தியாய்தான் வாழ்கின்றனர்...

எத்தனை நிறம், எத்தனை
மனிதம்,எதனை மிருகம்- நம்மில்..

கற்கிறேன் வாழ்க்கையை
காலை மாலை பயணத்தில்...

Comments

  1. நானும் கற்கிறேன்!நண்பா உன் தேடலில்
    உன்னை அறிந்ததால்!
    - இராம்

    ReplyDelete
  2. ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்..எண்ணெய் புரிந்த நண்பனை எனாகு கொடுத்தமைக்கு...மிக்க நன்றி நண்பா..

    ReplyDelete
  3. @ geetha: மிக்க நன்றி தோழியே!

    ReplyDelete
  4. kalakureenga arun...ithai than naan ethirpaathen...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!

உனக்காக ஓர் வரி..!!!

நால்சுவர், மூவறை ஈருயிராய் தனித்திருந்தோம் வெறுப்பாய், வெற்றிடமே எஞ்சியிருந்தது.. ஏனோ?.. வானிலை மாற்றமா? ! விளங்கவில்லை.. சிரித்தோம், பழகினோம் சிலாகித்தோம்... தூறல் விட்ட - இனிமை, குளுமை நம்மிடம்... உணர்ந்தேன் உனை - மண்வாசனையாய்...!!! ஆம்!!!!! இடி ஒலியாய் இறைந்த சிரிப்பொலிகள், ஒளிகற்றையாய் விலகிய நம் சோகங்கள் யாவும் நீயிருந்த மட்டும்... சிறுதூறல் இனிமை போல.... ஏனோ??? பிரிந்தோம் விழி புரிதலில் ரணமில்லா வலியுடன்... நினைத்தேன்! நகைத்தேன்! நினைவுகளில் உன்னால்... வரைகிறேன்!!! "உனக்காக ஓர் வரி"... என்று வருவாய் எனை பார்க்க....