Skip to main content

மழலை தூக்கம்...

கண்விழிக்கும் நிலவின் முகமே! கலைந்திடாய்
              உன் தூக்கத்தை, உன் உருள் பிறள்
அசைவுகளால் வரையப்பட்டிருக்கும்
             கசங்கிய கம்பளியே நான்..
விக்கித்து பார்க்கிறேன்
             உன் தூங்கும் அழகை...

உன் இதழ் பாதம்
           எனை களைத்த போதும்
உன் சிற்றுடல்
          நனைத்த போதும்
இரசிக்கிறேன் இந்த
          மழலை வேந்தன்....

சிரம் வலிக்கா பூவணையாய்
           நானிருந்தேன் சிரத்துக்கு,
நீயோ! நான் வலியா
           பூமலராய் பூத்துக்கொண்டிருக்கின்றாய் ...

உனை சுடுவிடா, விழித்திறல் திறந்துவிடா
              சூரியனாய் முயற்சித்தேன்
முடியாமல் போனதடா!
             என் முல்லைப்பல்
சிரிப்பழகே!!!

விளித்திரள் வழிநீரும்
உதடழகின் உமிழ் நீரும்
நீ நனைத்த கம்பளியும்,
மெத்தென தலையணையும்,
விழித்தெழ செயம் சூரியனும்
ரசித்துதான் பார்க்கின்றன
உன் தூக்கத்தின்
நெளி, சுழி அழகுகளை-
தூங்காமல்.....

Comments

  1. நல்ல இருக்கு
    இந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத வராது நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .