Skip to main content

கர்வம்!?...

காலங்கள் நான்காம், திசைகள் நான்காம்
வேதங்கள் நான்காம்...,ஆம்! மேலும் பல
அதில் நீயும் ஒன்று....

இதழ் பிதுக்கி, விழிசுருக்கி, நீர்விட்டு, உருண்டு,
புரண்டு - நான் வேண்டியது
பெற்றபோதெல்லாம் ரசித்தார்கள் உனை...
பிடிவாதமாம்!!!
சட்டை காலர் தூக்கி, காலால் உதைத்து,
மார் நிமித்தி வெற்றியாடிய போது
இனிஇதழால் வாழ்த்தினர் உனை...
அகம்பாவமாம்!!!

விளையாட்டா, வெளிநடப்பா,
நட்ப்பாய் இருந்தால் உதைபட்டு
முன்னின்று முடித்தபோது
உனைத்தான் பிடித்தது
என்றனர் எனில்...
அடங்கதனமாம்!!!

அன்பால், அமைதியால்- எதிர்த்து
அவள் கரம் பிடித்ததும்
வெறிக்கின்றனர், தூற்றி
சிரிக்கின்றனர்- இன்று..
கர்வமாம்!!!

Comments

  1. நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  2. @பதிவுலகில் பாபு : நன்றி நண்பா!

    @nis:மிக்க நன்றி தோழியே!

    ReplyDelete

Post a Comment