Skip to main content

Posts

கனவு விந்தை..!!!

சாதனைகள் பல புரிய சிந்தித்து  சாலையோரம் நடந்து வந்தேன் .... என்னருகே வேகமாய்  ஒரு பேருந்து  அதன் முன் விழுந்தேன் ஆ !!!!!!! என்ன விந்தை, மொட்டை மாடியின் ஒற்றை கம்பியை பிடித்து கொண்டு  நான்!!.....  அப்பொழுதுதான் தெரிந்தது  விழுமுன் கூட கனவு கண்டேனென்று .... படுகையில் பஞ்சனை களுக்கிடையில் நான்... எரிகின்ற என் நெஞ்சில் படிகின்ற கரியாய் அவள்  துடைக்கின்ற கரிகுட்டையாய் - அன்னை, நிறைவேறா சோகம் கலங்கும் விழியுடன்...தையல்கள் பல இடப்பட்ட படுகைய றை  பாயில் நான் .... இவன்  இள. அருண் குமார் 

தனிமை!!!!

" கொலை - குற்றம்தான் ... பிறரை பொருத்து... சூழ்நிலை என்ன செய்வாய் ...செய்துவிட்டாய்???!!! ... நீ அதை செய்தே ஆகவேண்டிய நிலை !!!.... இல்லை என்றல் உடனே கொன்றுவிடு ... ஏனென்றால் தனிமை கொடியது ..கொன்று விடும் உனை...."
புத்தினம் புதினமாய் புத்தியில் புனிதமாய் புலரட்டும் .... புதுமையோ, புலமையோ சிறுமையோ, சிந்தனையோ வளமையோ, வறுமையோ வாழ்வது நமக்கா கட்டும்.... இறந்த காலம்!!! இறவாமல் இருக்கட்டும் நினைவுகளில்... நிகழ்காலம்!!! இனி நிழலாய் இருக்கட்டும் நண்பர்கள் படைசூழ.... இத்தினதிலோர் உறுதி...! " செய்வன திருந்த செய்வோம் செய்ததை கடை பிடிப்போம்".... சிந்தையில் செம்மையாய் செழுமையை வாழ, நமக்கு வாழ்வளித்த தெய்வங்களுக்கு " பாதம் தொட்டு கோடி நமஸ்காரங்கள்".... ------இவன் இள.அருண் குமார்