Skip to main content

நிராகரிப்பு!!!!


அவனும் வேண்டாம்
அவனென்றால் எதுவும் வேண்டாமாம்!
தன்னிலை தாழாமலும்
பெண்ணிலை குறையாமலும் கூறினாள்...
என்ன உக்கிரம்!!!...

வழிபார்த்து விழியாக
வாசல் வந்தேன்- கூறிய
செவிரெண்டும் விழுங்கியவை யாவும்
தாக்கின மின்னலாய்,
வழியுமுன் உள்ளடக்கிய விழியாய்,
விழி நிமிர்த்தி நான் கண்டேன்
என்னவள்- சென்னிலவாய்
கோபத்தில்...!

நகைத்த இதழும்
கனத்த இதயமுமாய்
கண் நீர் சிரிக்க
விடைப்பெற்றாள் விரைவாக..
தடுமாறிய இதயமும்
தடம்மாறிடா உறவுமாய்
நிமிர்ந்த சிரமும்
தாழ்ந்த விழியுமாய் நான்...

குறிப்பறிந்து குறைகூறா
மனதுடன், என் வலியை
வழியனுப்பி, என்னவள்
வலி உணர்துனர்ந்தேன்...
கட்டுபாடற்ற கலங்கிய விழி
அணையுடைத்து- அரங்கேற்றியது
கண்ணீர் மழையை என்னவளுக்காய்...

வெட்க்குகிறேன் நான்,
நடந்து முடியா வார்த்தைகளுக்கும்
அரங்கேறிய நாடகத்துக்கும்...

நிச்சயமாய்!!!
அவள்- என்னவள்தான்
என் நெஞ்சின் அறையில்
நான்! - அவளுக்கில்லை
ஆம்ம்...! அவளுக்கானவன்
நானில்லை- இருந்தும் அவளை
நிராகரிக்க முடியவில்லை,
அவள்!- என்னின்
அலைகழிக்க முடியா
" இதய துடிப்பு " ....


.

Comments

  1. அன்பு சுகமானது தான், ஆனால்.. அது தரும் சோகம் அளவிலாதது
    என்றாலும் இதயங்கள் வேண்டுவது உண்மையான அன்பை மட்டும் தான் :)

    ReplyDelete
  2. //அவள்- என்னவள்தான்//

    ok ..right


    //என் நெஞ்சின் அறையில்
    நான்! - அவளுக்கில்லை
    ஆம்ம்...! அவளுக்கானவன்
    நானில்லை- இருந்தும் அவளை
    நிராகரிக்க முடியவில்லை,//

    no problem, i will inform to your father and mother, let we fix the date

    ReplyDelete
  3. try to add your post in below link
    http://www.tamilmanam.net

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!

உனக்காக ஓர் வரி..!!!

நால்சுவர், மூவறை ஈருயிராய் தனித்திருந்தோம் வெறுப்பாய், வெற்றிடமே எஞ்சியிருந்தது.. ஏனோ?.. வானிலை மாற்றமா? ! விளங்கவில்லை.. சிரித்தோம், பழகினோம் சிலாகித்தோம்... தூறல் விட்ட - இனிமை, குளுமை நம்மிடம்... உணர்ந்தேன் உனை - மண்வாசனையாய்...!!! ஆம்!!!!! இடி ஒலியாய் இறைந்த சிரிப்பொலிகள், ஒளிகற்றையாய் விலகிய நம் சோகங்கள் யாவும் நீயிருந்த மட்டும்... சிறுதூறல் இனிமை போல.... ஏனோ??? பிரிந்தோம் விழி புரிதலில் ரணமில்லா வலியுடன்... நினைத்தேன்! நகைத்தேன்! நினைவுகளில் உன்னால்... வரைகிறேன்!!! "உனக்காக ஓர் வரி"... என்று வருவாய் எனை பார்க்க....