பெண்ணை இழித்தோரை இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால், நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய் உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா? ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும் ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும், கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும், மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன், வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில் கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள் விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக நீ பிறந்து வந்...
Comments
Post a Comment