யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.! உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்.... இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ? நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்... உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும் பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும் நிழலாய் இவள் உறவு.... உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாண...
தமிழ்பிரளயம்-Tamil Pralayam