புரியவில்லை எனக்கு - நானா ?! உனக்கு எழுதுகிறேன் என்று நினைக்கும் பொழுது , புரிதலுக்கும் , பழகுதலுக்கும் மட்டுமே பயன் படுத்திய தமிழில் .... ஆச்சர்யம் தான் !!.. ஆனாலும் ஓர் நிறைவு , உனை பற்றிய , இல்லை இல்லை நமைப்பற்றிய என்னின் முதல் கிறுக்கலில் .... மாடர்ன்களுக்ம் ஃபேஷன்களுக்கும், இடையே , முழு நிலவாய் பூரணமாய் பிறந்தவள் - நான் !!! கோடையில் மார்கழியாய், கோடியில் ஒருவனாய் ஹரிநாமத்தில் பிறந்தவன் - நீ !!! பீமனோ , சூரனோ, பார்க்கத்தான் அப்படி முகம் மறைக்கும் இதழ் சிரிப்பும் விழி , விரி – வழிய கனிவும் கண்டேன் உனில்!!! சொப்பு வைத்தாடியதெல்லாம் செப்பிலக்கிய காலம் - மழலையாய் விரல் பிடித்து நடந்ததில்லை நிழலாடி திரிந்ததில்லை - இருந்தாலென்ன !!! மனநிறைவாய் மணமுடித்தவுடன் விரல் பிடித்து நிழலாடுவோம் - மழலையாய் ... தூது , உலா பற்றி கேட்டதாய் நியாபகம் , தலைவன் கடல் தாண்டி சென்றால் தன் நிலைப்பற்றி கூற,புறா ...
தமிழ்பிரளயம்-Tamil Pralayam